‘செய்திகள்’

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் சங்கராம்பூர், மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோத மதுபான நிலையங்களில் இவர்கள் மது அருந்தியபின் உபாதைகளுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மதுவை அருந்தியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 வைத்தியசாலைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இவர்களில் 50 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் மாநில சட்டசபையிலும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. இச்சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டு 93 பேர் பலியாகி ஒரு வாரத்திற்குள் சட்டவிரோத மதுபானத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் பலி!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற இரு
இளைஞர்கள் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற
இச்சம்பவங்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வி.நிரஞ்சன் (வயது 20) ஏழாலையைச்
சேர்ந்த தயாபரன் கீர்த்தனன் (வயது 18) ஆகிய இருவருமே
உயிரிழந்தவர்களாவர்
இளைஞர்களாக இவர்கள் குளிக்கச்சென்ற போது கடலில் கால நிலை
சீரின்மையாக இருந்துள்ளது. ஆயினும் இவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது தீடிரென்று
கடலில் அலை இழத்து சென்ற போதே இவர்கள் அந்த அலையில் சிக்கி
உயிரிழந்துள்ளனர்
கடற்படை உதவியுடன் மீட்கப்பட்ட இவர்களது சடலங்கள் தெல்லிப்பளை
ஆதார வைத்தியசாலையிலும்; முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையிலும்
வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் போராட்டத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டமை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

நேற்று சனிக்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தமது   யாழ். மாவட்ட
அமைப்பாளர் லலித்குமார  வீரராஜ், மற்றுமொருவரும் கொலை செய்யப்பட்டதாக தமக்கு
தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து
பிரிந்துசென்ற  மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தின்  ஏற்பாட்டாளர் சமிர கொஸ்வத்த
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட
வேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலளர்களுடனான சந்திப்பில் அவர்
கூறினார்.

லலித்குமார  வீரராஜ் கொல்லப்பட்டுவிட்டதாக தமக்கு தொலைபேசி
அழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் இருப்பினும் அவர் எங்குள்ளாரென்பது தொடர்பில் தமக்கு
இதுவரையில் தெரியவரவில்லையெனவும் சமிர கொஸ்வத்த குறிப்பிட்டுள்ளார். ‘இந்த தொலைபேசி
அழைப்பை தங்களால் நம்பமுடியாது.  இருப்பினும் அவர் ஆபத்தான நிலையிலுள்ளாரென்பது
தெளிவாகிறது’ என அவர் கூறினார்.

கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்
லலித்குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் குறித்து அரசாங்கம் பொறுப்புக்கூற
வேண்டுமெனவும் சமிர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.

லலித்குமார வீரராஜ்
வடபகுதியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டுமெனவும்  லலித்குமார
வீரராஜ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவரது தந்தை   தடுத்துநிறுத்தாவிடின்
தாங்கள் அவர் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து நீக்குவோமெனவும்  லலித்குமார வீரராஜ்ஜின்
தந்தைக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றதாகவும் சமிர கொஸ்வத்த
கூறினார்.

இந்நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டிருக்கக்கூடிய
சாத்தியத்தை நிராகரித்த அவர்,
வடக்கில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
மக்கள் விடுதலை முன்னணிக்கு அரசியல் பலம் இல்லையெனவும் விருப்பமில்லையெனவும்
தெரிவித்துள்ளார்

காதலனுடன் சுற்றித்திரிந்துவிட்டு பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தனது காதலனுடன் சுற்றித்திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், தான் சட்டவிரோதமாக உள்ளுறுப்புகள் அகற்றி விற்பனை
செய்யும் போலி வைத்தியசாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தப்பி வந்ததாக
பொய்கூறியமை அம்பலமாகியுள்ளது.

தம்புள்ளையைச் சேர்ந்த இப்பெண் ஒக்டோபர் 18 ஆம் திகதி கண்டியிலுள்ள
வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.  ஆனால் அவர் அன்று வீடு
திரும்பவில்லை.

அப்பெண்ணை தேடிக்களைத்த அவரின் கணவர், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தார். இது
குறித்து  நாடுமுழுவதும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

15 நாட்களின் பின்னர் அப்பெண் தம்புள்ளையிலுள்ள வீட்டிற்குத் திரும்பி
வந்தார்.

தான் கண்டியில் மேற்படி வைத்தியசாலையில் இருந்தபோது, தன்னை அணுகிய இருநபர்கள்,
தாம் தென்னிந்தியாவிலிருந்து வந்த மருத்துவர்கள் எனகூறிக்கொண்டு,  தனக்கு இலவச
மருத்துவச் சிகிச்சை செய்ய முன்வந்தனர் எனவும் அப்பெண் கூறினார்.

அதன்பின் தான் வான் ஒன்றில் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்
அங்கு மேலும் நான்கு பெண்களுடன் ஏறத்தாழ கைதிபோல் வைக்கப்பட்டிருந்தாகவும் அவர்
கூறினார்.

மருத்துவச சத்திரசிகிச்சையாளர்கள் போல் ஆடை அணிந்திருந்த குழுவொன்று அங்கு
காணப்பட்டதாகவும் அவர்கள் தனது உள்ளுறுப்புகளை அகற்றி அதிகவிலைக்கு இந்தியாவில்
விற்பனை செய்ய  முயன்றதாகவும் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறினார்.

பின்னர் தன்மீது அனுதாபம் கொண்ட ஊழியர் ஒருவரின் உதவியுடன்
வைத்தியசாலையிலிருந்து தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

‘எனக்குத் தெரியாத இடமொன்றிலிருந்து இரவு ரயிலொன்றில் நான் ஏறினேன்.
அதன்பின்நான் கோட்டை ரயில் நிலையத்தில் காணப்பட்டேன். பின்னர் ஒரு தம்பதி எனக்கு
500 ரூபாவை தந்துதவினர். அதன்மூலம் நான் தம்புள்ளைக்கு திரும்பிவந்தேன்’ என அப்பெண்
கூறினார்.

இப்பெண் கூறிய கதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் புலனாய்வுக் குழுக்களும்
நியமிக்கப்பட்டன.

சுமார் இரு மாதகால கடும் விசாரணைகளுக்குப் பின்னர் பொலிஸார் உண்மையை
கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சண்டே டைம்ஸுக்கு கூறுகையில் ‘உண்மைக்
கதை என்னவென்றால் அப்பெண் மருத்துவமனைக்குச் செல்லாமல் காதலர் ஒருவருடன்
பொலன்னறுவைக்குச்  சென்று விடுதி அறையொன்றை பதிவுசெய்துள்ளார்.

அன்றிரவு இந்த ஜோடி விடுதியிலிருந்து வெளியேறி தம்புள்ளைக்கு செல்லத்
தீர்மானித்துள்ளனர். பொலிஸ்ரோந்துப் பிரிவினரால் இவர்கள் விசாரிக்கப்பட்டபோது தாம்
அங்கிருப்பதற்கான காரணம் எதையும் இவர்களால் கூறமுடியவில்லை.

அதனால் இவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர்
நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். நாடோடி கட்டளைச்சட்டத்தின்கீழ் இவர்கள் குற்றம்
சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இத்தகைய இந்திய மருத்துவர்களோ போலி மருத்துவ நிலையமோ இருக்கவில்லை. தான் 14
நாட்கள் விளக்கமறியலில் இருந்ததை மறைப்பதற்காக அவர் கட்டிய கதை இது.

ஆனால் இக்காலத்தில்  விசாரணைகளுக்காக பெருமளவு பொதுமக்கள் பணமும் பொலிஸாரின்
நேரமும் இதற்கு விரயமாகியுள்ளது. அத்துடன் நாட்டின் மதிப்பும்
பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ளுறுப்புகளை திருடி விற்கும் சம்பவங்கள் ஏனைய ஆசியநாடுகள், ஆபிரிக்க
மறறும் 3 உலக நாடுகளில் மாத்திரமே நடைபெறுகிறது. இலங்கை ஒருபோதும் இதில் விழவில்லை.
அதனால்தான் இம் முழு விடயத்தினதும் அடித்தளத்தை கண்டறிய நாம் உறுதிபூண்டோம்’
என்றார்.

இப்பெண் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.  பொலிஸாரிடம்
பொய்யான முறைப்பாடு செய்த குற்றத்திற்காக அவருக்கு 25 வருடங்களுக்கு
ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளை சமூகத்தில் தனிமைப்படுத்த வேண்டாம் :அமைச்சர் கஜதீர

உணர்வு ரீதியாக முன்னாள் போராளிகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் அவர்களைத்
தனிமைப்படுத்த வேண்டாம் எனவும் எமது நாட்டின் பொருளாதார வளத்தை
கட்டியெருப்புவதற்காக முன்னாள் போராளிகள் பயிற்றப்பட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு
மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர
தெரிவித்துள்ளார்

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை
முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு காசோலை
வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

46 முன்னாள் போராளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அதில் 5 பெண்களும் 41
ஆண்களும் உள்ளடங்குகின்றனர். மீண்டும் சமூகத்தோடு இணைத்து அவர்களின் வாழ்வியலில்
முன்னேற்றுவதற்கான  சுயதொழில் ஊக்குவிப்பு காசோலைகளும் வழங்கப்பட்டது

‘எந்த
சந்தர்ப்பத்திலும் முன்னாளள் போராளிகளை நாங்கள் தனிமைப்படுத்த மாட்டோம் அவர்களின்
எதிர்கால வாழ்வுக்காக என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

எமது
நாட்டினுடைய பொருளாதார வளர்சியில் இவர்களின் பங்கு முக்கியம் பெறுகிறது. அரசியல்
ரீதியாகவும் இனரீதியாகவும் செயற்பட்டு அவர்களின் மனங்களில் மாற்றுக்கருத்தை
விதைத்து அழவுப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம்’ எனவும் அவர் மேலும்
கூறினார்.

இதேவேளை புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ராஜகுரு உரையாற்றுகையில் ’12 ஆயிரம் போராளிகள் எம்மிடம் சரணடைந்தார்கள் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு 10 ஆயிரத்தி 300 பேரை நாங்கள் விடுதலை செய்துள்ளோம். இந்த விடுதலையோடு சேர்த்து இது 32 வது தடவையாக முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளோம்

யாழில் உள்ள தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தை முடிவிட்டு அங்கு தொழில்
பயிற்சிக் கல்லூரி விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் ‘என்றார்.

இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர்
திஸநாயக்க,  ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திர குமார், சில்வேஸ்திரி
அலன்ரின், யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சீனச் செல்வாக்கு அதிகரிப்பது ஓர் அச்சுறுத்தல் அல்ல: இந்தியாவில் இலங்கை இராணுவத் தளபதி

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனச் செல்வாக்கானது இந்திய உபகண்டத்திலுள்ள
எந்த நாட்டுக்கும் எந்த  அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என இந்தியாவுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய
கூறியுள்ளார்.

தெஹரதுன் நகரிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் இராணுவ
உத்தியோகஸ்தர்கள் பயிற்சிமுடிந்து வெளியேறும் வைபவத்தில் கலந்துகொண்டபின்னர்
செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன.  இரு நாடுகளின்
இராணுவங்களும் பயிற்சிகள் உட்பட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைத்து வருகின்றன
என அவர் கூறினார்.

இந்திய இராணுவக் கல்லூரியில் இதுவரை இலங்கை இராணுவ
உத்தியோகஸ்தர்கள் 120 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்iகியல் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் ஏனைய
நாடுகளில் அவர்களில் அனுதாபிகள் உள்ளதாகவும் இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல்
ஜகத் ஜயசூரிய கூறினார்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து
கேட்டபோது, இப்போது நிலைமை சாதாரணமாகி வருவதாகவும் மக்கள் தமது இடங்களுக்கு
திரும்பிவர ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சிங்களத்தி செவேந்தியுடன் கைகோர்த்திருக்கும் சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன்!

 

சிறிலங்கா புலனாய்வு சிங்களத்தி செவேந்தியின் கீழ் லங்காசிறி, தமிழ்வின், மனிதன், இணையத்தளங்கள் இயங்குகின்றன. அந்த சிங்களத்தியுடன் கைகோர்த்துக்கொண்டே சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன் செயற்படுகிறார். இது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதற்குரிய ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களுடன் இணைத்துள்ளோம்.

மேலும்…

கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார்

 

சிறிலங்கா அரசாங்கத்துடன் இருக்கும் கே.பியினால் லங்காசிறி, மனிதன் இணையத்தளங்கள் வழிநடத்தப்படுகின்றன என்ற விடயத்தை மனிதன், லங்காசிறி இணையத்தளங்களை நடத்தும் சிறிகுகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். மனிதன், லங்காசிறி இணையத்தளத்தின் பணிப்பாளர் ஒரு இனதுவேசம் கொண்ட சிங்கள பெண்ணாகும்.

மேலும்…

மனிக்பாம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ள மாணவர்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

மேலும்…

திருட்டை சுட்டிக்காட்டினாலும் திருந்தாத மனிதன் இணையத்தள போலிகள்

 

நேற்று எங்கள் இணையத்தளத்தில் கனடாவிலிருந்து எமது சகோதர இணையத்தள உரிமையாளரால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை என்ற வீடியோவை அதற்குரிய செய்தியை நாம் எழுதி தினக்கதிரில் வெளியிட்டோம். அந்த வீடியோவும் செய்தியும்  எமது தமிழ்வணிகம் மற்றும் தினக்கதிர் இணையத்தளங்களுக்கு சொந்தமானது.

மேலும்…