‘செய்திகள்’

ஜேர்மன் ஜனாதிபதி தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது?

பொதுமக்கள் வாக்களிப்பதன்மூலம் ஜெர்மன் ஜனாதிபதி nதிரவு செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் வாக்கு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரம் விசேட குழு
ஒன்று அமைக்கப்படும்.
ஜெர்மன் அரசமைப்பில் சமஷ;டி மாநாடு என்பது விசேடமான ஒரு (அசெம்பிளி) அமைப்பு
ஆகும்..அந்த அமைப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்படுவதாகும்.

மேலும்…

ஆட்சியைப்பிடிக்க எத்தனிக்கும் தலைமை அமைச்சர் விளாடிமிர் புட்டினுக்கு சார்பாகவும் எதிராகவும்

பல்லாயிரக்கண்காகனோர் மாஸ்கோ நோக்கி அணி திரண்டு சென்று கொண்டிருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக்கூறப்படும் டிசம்பர் மாத ஜனாதிபதி தேர்தலுக்குபின்னர் நடைபெறவிருக்கும் மூன்றாவது பேரணி இதுவாகும்.

மேலும்…

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் நாட்டில் சில சிவில் வழக்குகளை

விசாரிக்க ஷhரிய நீதிமன்றங்களுக்கு ஜேர்மனி அனுமதி வழங்கலாம் என்று

Rhineland-Palatinate

(றைன்லந்து-பலட்டினேற் )மாநிலத்தின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது ஆத்திரத்தை கிளறியுள்ளது. இரு தரப்பும் சம்மதிக்கும் பட்சத்தில் ஷரியா

நீதிமன்றங்களின் முன் சிவில் வழக்குகளை விசாரிக்க தாம் அனுமதி வழங்க தயாராக

இருப்பதாகவும் மத்திய இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயகக்கட்சியின்

உறுப்பினரானஜோசென் ஹார்ட்ஓப் பெர்லின் பத்திரிகை ஒன்றுக்கு

தெரிவித்துள்ளார்.

மேலும்…

பிரித்தானியா எயார்வேஸ் நிறுவனமும் அங்கம் வகிக்கும் one world(வன்வேர்ல்ட் )விமான

அணியில் இடம்பெற்றுள்ள 66 வருட காலமாக சேவையில் ஈடுபட்டு வருகின்ற மலேவ் என்ற

ஹங்கேரியா விமான நிறுவனம் ஒன்று நிதிநிலை மோசாமடைந்த காரணத்தினால்

வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் விமான சேவை இயங்காது என்றும்

அறிவிக்கப்படுகின்றது.

மேலும்…

ஆங்கில‌‌‌ப் புத்தாண்டு பொது‌ப் பலன் 2012

ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் 1.1.2012ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2+0+1+2=5) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மேலோங்கும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள்.

மேலும்…

தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா? (யாழ் காணொளி)

 

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக் களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

இணையத்தில் ‘செக்ஸ்’ தேடலில் பாகிஸ்தான் முதலிடம்; இந்தியா இரண்டாமிடம்

இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக ‘கூகுள் ட்ரென்ட்ஸ்’ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இதேவேளை செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.

இவ்வருடத்தில் மாத்திரமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.

மேலும்…

இலங்கைக்கு வரும் குறுகிய கால பயணிகளுக்கு இன்றுமுதல் இணையத்தளம் மூலமான முன் அனுமதி அவசியம்

இலங்கைக்கு குறுகியகால பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் நாட்டை வந்தடைவதற்கு முன்னர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயண அனுமதியைப் பெற்றுக்கொள்வது இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்…

ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை

 

ஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில்  மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில்  தொங்கி சாதனையை படைத்துள்ளார்.

மேலும்…

ஈராக்கில் தனது படை நடவடிக்கை முடிவுற்றதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பிரகடனம்

வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011 23:55

 

ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது.

2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர்.

இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்;க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன.

ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா, ஈராக்கில் பணியாற்றிய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஈராக்கிலிருந்து நாடு திரும்பும் படையினரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க ஐக்கிய அமெரிக்காவானது ‘இறையாண்மை, ஸ்திரநிலை மற்றும் சுயசார்புள்ள ஈராக்கை ஏற்படுத்திவிட்டுத் திரும்பியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தாலும் அங்கு இன்னும் இரு தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 4000 படையினர் உள்ளனர்.

2007 ஆம் ஆண்டு யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் 505 தளங்களில் சுமார் 170,000 அமெரிக்கப் படையினர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.