‘இந்தியா செய்திகள்’

பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் – கி.வீரமணி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலன்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்றவர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
விகடன் மேடை நடத்தும் வாசகர் கேள்விகள் நிகழ்வில் வாசகர் ஒருவர் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் கி.வீரமணி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

மேலும்…

http://www.thinakkathir.com/

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் சங்கராம்பூர், மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோத மதுபான நிலையங்களில் இவர்கள் மது அருந்தியபின் உபாதைகளுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மதுவை அருந்தியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 வைத்தியசாலைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இவர்களில் 50 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் மாநில சட்டசபையிலும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. இச்சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டு 93 பேர் பலியாகி ஒரு வாரத்திற்குள் சட்டவிரோத மதுபானத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 1/2 கோடி ஆண்டு வயது மிக வெளிச்சமான, சுழலும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள் பெர்மி காமா கதிர் டெலஸ்கோப் மூலம்
விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அதிசய நட்சத்திரத்தை கண்டு
பிடித்தனர். அது மிகவும் வெளிச்சமாக உள்ளது. அதிகவேகமாக சுழன்று வருகிறது. அது
உருண்டையாக ஒன்று சேர்ந்து திரண்டு இருப்பது போன்று காட்சி அளிக்கிறது.

மேலும்…

இங்கிலாந்தில் பக்கிங்காம் அருகே ரூ.1000 கோடிக்கு அரண்மனையை வாங்கிய இந்திய தொழில் அதிபர் இந்துஜா

இங்கிலாந்தில் பங்கிங்காம் அரண்மனை அருகே இந்துஜா சகோதரர்கள் அரண்மனையை வாங்கி
பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.

இந்திய தொழில் அதிபர் இந்துஜா சகோதரர்கள், தங்களது வர்த்தக மற்றும்
சொத்துக்களின் பரப்பு எல்லை விஸ்தரித்துக் கொண்டே போகின்றனர். வெளிநாடுகளில்
முதலீடுகள் செய்வதுடன் சொத்துக்களையும் வாங்கி குவிக்கின்றனர்.

மேலும்…

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்

யோகா குரு ராம்தேவ்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : வரவிருக்கும்
பஞ்சாப்  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக  தன் ஆதரவாளர்களுடன்
சேர்த்து பிரச்சாரம்  மேற்கொள்ள உள்ளேன். இது தவிர   உத்தர பிரதேசம் உள்ளிட்ட
தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யயுள்ளேன் காங்கிரஸ் வேட்பாளர்கள்
தோல்வி உறுதி.
ஏற்கனவே ஊழல் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  மத்திய அரசுக்கு
கடிதம் எழுதினேன் ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்தார் .

மேலும்…

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள்

சென்னையில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 நிமிடம்
முன்னதாகவே மதியம் 2 மணிக்கு திருச்சி விமான நிலைய ஓடு தளத்தில் இறங்கிக்
கொண்டிருந்தது.

அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு
சென்றது. அப்போது 2 விமானங்களும் ஒரே நேரத்தில் ஓடு தள பாதையில் மோதுவது போல்
அருகருகே சென்றன.

மேலும்…

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு

டெல்லி: ரிலையன்ஸ், இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி ஆகியோர் தனித் தனியே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று திடீரென சந்தித்துப் பேசினர்.

மேலும்…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டதே தயாநிதி மாறன் தான்: பிரதமர் குற்றச்சாட்

2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு, அந்த அதிகாரத்தைத் தர மறுத்து நெருக்கடி தந்த தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டார் என்று மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

மேலும்…

தனி மாநிலம் தருவோம் சிதம்பரம் வாய்விட்டதால் தான் தெலுங்கானாவில் பிரச்சனை: பாஜக

டெல்லி: தெலுங்கானா பிரச்சனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்…