ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை

ஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில்  மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில்  தொங்கி சாதனையை படைத்துள்ளார்.
இலங்கைத்தமிழரான சுதாகரன் சிவஞானதுரை என்ற இநந்த இளைஞரே இந்த சாதனையை செய்துள்ளார்.  இவர் யோகா பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டவர். இலங்கையில் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட நேரத்திலும் பின்னர் ஒஸ்ரேலியாவில் அகதி முகாமில் இருந்த காலத்திலும் இந்த பயிற்சியை செய்து பழகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய தலைமயில் மிகவும் வலிமையானது. நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்’ என கின்னஸ் சாதனையை படைத்துள்ள சுதாகரன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.