சர்ச்சைக்குரிய லண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தேருக்கு தீ?

சர்ச்சைக்குரிய லண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தேருக்கு தீ?

Published on November 19, 2011-10:19 am    ·   No Comments

லண்டன் முத்துமாரி அம்மன் கோவிலின் சித்திரத் தோர் கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணிக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சிவயோகம் அறக்கட்டளை என்ற பெயரில் சீவரத்தினம் என்பவர் இக்கோவிலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று கோவிலுக்கு தீவைத்ததாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினருக்கும், தீயணைக்கும் படையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து தீஅணைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் ஒரு இலட்சம் பவுண் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்கோவில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றம் கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என  தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதிலிருந்து வெளியேறாத நிலையில் இத்தீவைப்பு சம்பவம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிவயோகம் அறக்கட்டளை நிதியத்தை சேர்ந்த சீவரத்தினத்திற்கு விடுதலைப்புலிகள்  2005ஆம் ஆண்டு ஜெயதேவன் நடத்திய கோவிலை பறித்தெடுத்து கொடுத்திருந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அக் குற்றத்திற்காக நீதிமன்றம் 40ஆயிரம் பவுண் அபராதம் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திற்கு விதித்ததுடன் அக்கோவிலை உடனடியாக ஜெயதேவனிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
வன்னியில் வைத்து ஜெயதேவனை விடுதலைப்புலிகள் சிறைவைத்துக்கொண்டு அவரிடமிருந்து கோவிலை எழுதி வாங்கியிருந்தனர். இது குற்றம் என தீர்ப்பளித்த பிரித்தானிய நீதிமன்றம் ஆலயத்தை ஜெயதேவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 40ஆயிரம் பவுண் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய முறைகேடான செயல்களில் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்தை சேர்ந்தவர்கள் செயற்பட்டார்கள் என பிரித்தானிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் மார்ச் 2011 உடன் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அதிலிருந்து வெளியேறாமல் இருந்த நிலையில் தங்களுடைய ஒரு இலட்சம் பவுண் பெறுமதியான தேரை யாரோ எரித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.