தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறோம்- சிவாஜிலிங்கம்!

Published on November 1, 2011-2:37 pm    ·   No Comments

அமெரிக்காவிற்கு தங்களை அழைத்து செல்லாததால் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாகவும், இது தொடர்பாக ரெலோ இயக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி திருமலையில் கூடி ஆராய்ந்து சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாக சிறிலங்கா மிரர் என்ற இணையத்தளத்திற்கு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி. ஆர்.எல். எவ் (சுரேஷ் அணி) டெலோ ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தங்களைப் புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் 12 கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது தங்களுக்கும் இடமளிக்காமை, அமெரிக்க விஜயத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளைச் சோத்துக் கொள்ளாமை தொடர்பில் ஆறாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறினார். தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரெலோ இயக்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருடன் தினக்கதிர் தொடர்பு கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறாரே என கேட்ட போது சிவாஜிலிங்கத்திற்கு பைத்தியம் என ஒரு வார்த்தையில் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்தியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்துங்கள்…   http://www.thinakkathir.com/?p=16908,     http://www.thinakkathir.com/?p=15247,     http://www.thinakkathir.com/?p=20752

  1. ஈழத்தமிழன்

    உம்மை இவ்வளவு நாளும் இவர்கள் வைத்தி ருந்தததே தப்பு . கருணா .பிள்ளையானோடு..
    சேரலாமே ?

Leave a Reply

Your email address will not be published.