சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார் சக்சேனா

posted in: தமிழ்நாடு | 0

சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

இவர் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது.

இதனைத் தொடர்ந்து சக்சேனா சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் கலாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலாநிதிமாறன் அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என சக்சேனாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.