தமிழக அரசு ஊழியர் சம்பளம்- செலவு ரூ.25,751 கோடி

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதந்தோறும் ரூ.25,751 கோடி செலவிடப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


சட்டசபையில் நேற்று அவர் பேசுகையில், தமிழக அரசுக்கு விற்பனை வரிகள் மூலம் ரூ.37,191 கோடியும், ஆயத் தீர்வைகள் மூலம் ரூ.10,191 கோடியும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை மூலம் ரூ.6,492 கோடியும், வாகனங்கள் பதிவு வரிகள் மூலம் ரூ.3,235 கோடியும் வருவாய் கிடைக்கிறது. மத்திய அரசு அளிக்கும் வரி வருவாய் உள்ளிட்ட பிற வகையான வருவாய் மூலம் ரூ.85,685 கோடி நிதி திரட்டப்படுகிறது.

இதில், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் மாதச் சம்பளத்துக்கென ரூ.25,751 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்காக ரூ.12,304 கோடியும், நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.13,015 கோடியும், வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.15,877 கோடியும் என மொத்தம் ரூ.1,01,388 கோடி செலவாகிறது.

நகர்ப்புற மக்கள் தொகையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நகர்ப்புற சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரசு முன்னுரிமை அளிக்கிறது.

சென்னையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு ரூ.500 கோடியும், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.750 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.14,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.13,052 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

நேற்றுடன் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத் தொடர் 33 நாட்கள் நடந்தது.

Source & Thanks : thatstamil

1 விமர்சனம் to “தமிழக அரசு ஊழியர் சம்பளம்- செலவு ரூ.25,751 கோடி”

  1. alex Says:

    என்னங்க இது எதோ கதை சொல்றிங்க . எங்க தமிழ்நாட்டுல மொத்தமே சேல்ஸ் டக்ஸ் கமிசியன் இவ்ளோதான் வருதா

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil