ஸ்பெக்ட்ரம் வழக்கில்,மேலும் 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, நேற்று டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுதாக்கல் செய்தார்.

இதேபோல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, அவருடைய சகோதரரும், டி.பி.ரியால்டி குழுமத்தைச் சேர்ந்த குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான ஆசிப் பல்வா, மற்றொரு இயக்குனரான ராஜீவ் அகர்வால் ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்திய டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்தார்

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.