ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இன்று முதல்வராக பதவியேற்கிறார் மமதா

கொல்கத்தா: 34 வருட காலமாக செங்கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்காளத்தை மாபெரும் வெற்றியுடன் கைப்பற்றியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று பிற்பகல் முதல்வராகப் பதவியேற்றுக் கொள்கிறார்.


ஆளுநர் எம்.கே.நாராயன், அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ராஜ்பவுன் ஹவுஸில் பதவிபயேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் மமதா பெறுகிறார். அதே சமயம், காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத முதல் அரசை அமைக்கும் பெருமையையும் அவர் பெறுகிறார்.

பிற்பகல் 1.01 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மமதாவுடன் அமைச்சரவையும் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் மமதாவும், அஏவரது அமைச்சர்களும் ரைட்டர்ஸ் பில்டிங் எனப்படும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பதவியிலிருந்து விலகும் முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மற்றும் அவரது மனைவி மீரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.