மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கு சேர தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில்(எம்.சி.ஐ.) முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.

பொது நுழைவுத் தேர்வுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதையடுத்து தமிழக அரசின் வாததத்தை ஏற்ற நீதிமன்றம் எம்.சி.ஐ. அறிவிப்புக்கு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக்கோரி எம்.சி.ஐ. ஒரு மனுவை தாக்கல் செய்தது.

பொது நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்பபு தெரிவித்து தற்போது தமிழக அரசு பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது சிரமமானது. அதனால் வீண் குழப்பமும், பிரச்சனையும் ஏற்பட்டு மாணவர்களின் நலன் தான் பாதிக்கப்படும். எனவே, மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

அரசின் பதில் மனுவை ஏற்று, நுழைவுத்தேர்வு நடத்தும் வகையில் எம்.சி.ஐ. வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மாணவர்களுக்கு சமூகநீதி கிடைத்திடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.