வெளிநாட்டில் நானோ கார் தயாரிப்பு : டாடா மோட்டார்ஸ்

புதுடில்லி : லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் விரைவில் நானோ கார் தயாரிப்பை துவக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


உலகம் முழுவதும் தனது உற்பத்தி ஆலைகளை துவக்கி, நானோ கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. இதற்கான பணிகள் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக டாடா இண்டஸ்ட்ரீஸ் மார்கெட்டிங் மேனேஜர் கிஷோர் கே.சவுகர் தெரிவித்துள்ளார். தாங்கள் தேர்வு செய்திருக்கும் நாடுகளில் எவற்றில் இட வசதி, போதிய வசதிகள் உள்ளதோ அங்கு தனது புதிய உற்பத்தி ஆலையை துவக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.