இந்தியா-சீனா எல்லையில் 14ம் திகதி நிலநடுக்கம் ஏற்படும்: விஞ்ஞானிகள் கணிப்பு

வருகின்ற 14ம் திகதி இந்திய மற்றும் சீன எல்லையில் நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார்.

இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது: கடந்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் குறித்து நானும், எனது குழுவினரும் ஆய்வு செய்து எதிர்காலத்தில் நடக்கும் நிலநடுக்கங்கள் குறித்து கணித்து உள்ளோம்.

ஜப்பானில் கடந்த மாதம் நடந்த நிலநடுக்கத்தையும், இந்த மாதம் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிலநடுக்கத்தையும் ஏற்கனவே கணித்து கூறி இருந்தேன். அடுத்த சில நாட்களில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருகிற 14ந் திகதியில் இருந்து 16ந் திகதிக்குள் இந்தியா-சீனா எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்.

ஏப்ரல் 16ந் திகதியில் இருந்து 20ந் திகதிக்குள் ஜப்பானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படும். வருகிற 17ந் திகதிக்குள் இந்தோனேசியா நாட்டில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படும்.

அதே போல துருக்கி, ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தோனேசிய பகுதியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் இலங்கையில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.