விடுதலைப் புலி சந்தேக நபர்கள் வழக்கு நிறைவடைந்தும் விடுதலையாகாத நிலையில் தடுத்து வைப்பு

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலருக்கு எதிரான வழக்குகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அவர்களை விடுதலை செய்வதில் அரசாங்கம் அசமந்த போக்கைக் காட்டி வருகின்றது.

அவ்வாறான சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான சட்ட மா அதிபரின் சிபாரிசு நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படாமையே அதற்கான காரணம் என்று எமது தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் மட்டும் அவ்வாறு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும் சட்டமா அதிபர் திணைக்கள சிபாரிசு இன்மை காரணமாக அநியாயமான முறையில் 20க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப் பயன்பட்ட வாக்குமூலம் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தலைப் பிரயோகித்தே பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்திருப்பதானது அடிப்படை உரிமை மீறல் செயற்பாடாகும் என்று சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

Source & Thanks: tamilwin

Leave a Reply

Your email address will not be published.