50 வயது ஐபிஎஸ் அதிகாரி சாதனை: பாக் ஜலசந்தியை வேகமாக நீந்திக் கடந்தார்

ஹைதராபாத்தை சேர்ந்த 50 வயதான ஐபிஎஸ் அதிகாரி, பாக் ஜலசந்தியை மிக வேகமாக நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

30 கிலோ மீட்டர் தொலைவை இவர் 12 மணி 31 நிமிடங்களில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநில காவல் துறைத் கூடுதல் தலைவர் ராஜிவ் திரிவேதி (50). இவர், மத்திய பிரதேசத்தை சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலா சாகேப் ராமச்சந்திர காட்கேயுடன் (48), மார்ச் 25-ம் திகதி காலை 4 மணிக்கு இலங்கையின் தலைமன்னாரில் தனது சாதனை பயணத்தை தொடங்கினார். அன்று மாலை சரியாக 4 மணிக்கு தமிழகத்தின் ராமேஸ்வரத்தை அடைந்தனர். இதன் மூலம், பால் ஜலசந்தியை கடந்த போலீஸ் அதிகாரிகள் என்ற பெருமையை திரிவேதி, காட்கே இருவரும் பெற்றுள்ளனர்.

இது குறித்து திரிவேதி கூறுகையில், அதிகாலையில் பயணத்தை தொடங்கியதால் இருளில் ஒன்றும் தெரியவில்லை. எனக்கு முன்னாள் சென்ற வழிகாட்டி படகில் இருந்த விளக்கின் ஒளியை பின்பற்றி நீந்த துவங்கினோம். சுறா மீன்கள், ஜெல்லி மீன்கள், விஷ பாம்புகள் போன்றவற்றால் ஆபத்து நேரும் அபாயம் இருந்தது. இருப்பினும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த நவீன கருவியை படகில் தொங்கவிட்டிருந்ததால் இந்த ஆபத்துகளிலிருந்து தப்பிக்க முடிந்தது.

மேலும், ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி காரணமாக, கடலில் அலைகள், நீர் சுழற்சி, வேகமான காற்று குறைவாக இருந்தது. இந்த சாதகமான சூழ்நிலையை கருத்தில் கொண்டே சாதனை பயணத்தை திட்டமிட்டோம் என்றார். திரிவேதி ஏற்கனவே 2001-ல் ஜிப்ரால்டர் ஜலசந்தியை 13 மணி நேரத்தில் நீந்தி கடந்துள்ளார். அதே ஆண்டு ஆங்கில கால்வாயை கடக்க இவர் மேற்கொண்ட முயற்சி, வேகமான கடல் நீரோட்டம் காரணமாக வெற்றி பெறவில்லை.

காட்கே, அரபிக் கடலில் மிக நீண்ட தூரம் நீந்தி சாதனையை படைத்தவர். அதே போல், திரிவேதியுடன் சேர்ந்து ஜிப்ரால்டர் ஜலசந்தியையும் இவர் நீந்தியுள்ளார். இந்த சாதனைகளுக்காக போலீஸ் அதிகாரிகள் இருவரும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.