அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே குழப்பம் இல்லை; பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

posted in: தமிழ்நாடு | 0

தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.கவுடன் நடந்த பேச்சு வார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட பட்டியல்தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் இணைந்து போட்டியிடுகிறோம். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. எங்களுக்குள் குழப்பம் நிலவுவதாக அவதூறு பிரசாரம் செய்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை.

அனைத்து கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு கண்டுள்ளோம். அதன் அடிப்படையில் தான் அ.தி.மு.க. ஏற்கனவே அறிவித்து இருந்த விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளை எங்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளது.

வேட்பாளர்கள் யார் என்று பார்த்து எங்கள் கட்சி தொண்டர்கள் தேர்தல் வேலை பார்ப்பது இல்லை. கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்கள். எங்கள் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்று மாநிலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். தேர்தலை புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது குறித்து நாங்கள் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.