எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு; காமன்வெல்த் ஊழலுக்கு நான் காரணம் அல்ல; சுரேஷ் கல்மாடி விளக்கம்

காமன்வெல்த் ஊழல் தொடர்பாக ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 9 மணி நேரம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காமன்வெல்த் ஊழலுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஏன் என்றால் பணிகள் தொடர்பான எல்லா முடிவுகளையும் நான் தனியாக எடுக்கவில்லை. போட்டி அமைப்பு குழுவில் உள்ள எல்லோரும் சேர்ந்து தான் முடிவுகளை
எடுத்தோம்.

போட்டி அமைப்பு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோனல்சிங்கை அரசு நியமித்து இருந்தது. அவர் தலைமை யில்தான் எல்லா முடிவுகளும் எடுக் கப்பட்டது. நிதி தொடர்பான விவகாரங்களை அவர்தான் கவனித்தார். எனவே அவர்தான் முழு பொறுப்பு. அவரிடம் விசாரிக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஜோனல்சிங் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளையும் அர்ப்பணிப்போடு செய்தார். எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியும். அதேபோல பல்வேறு அரசு நிறுவனங்களுக்கும் எடுக்கப்பட்ட முடிவுகளில் பொறுப்பு உள்ளது.

அவர்களிடமும் விசாரிக்க வேண்டும். எனது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் எனது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக முறையாக கணக்கு காட்டி வருகிறேன்.

சி.பி.ஐ. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர நான் தயாராக
இருக்கிறேன். இதுவரை நடந்த விசாரணையில் நான் அளித்த பதில்கள் சி.பி.ஐ.க்கு முழு திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.