தமிழக ரயில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு போதாது

posted in: தமிழ்நாடு | 0

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் இரண்டாவது பாதைகள் அமைக்கும் பணிகள் ஆண்டுக்கணக்கில் காலதாமதம் ஏற்படும் நிலையே உள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் 100 கி.மீ., தூரத்திற்கு குறைவாகவே மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 910 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளன. தமிழகத்தில் முக்கிய ரயில் பாதைகளாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – கன்னியாகுமரி பாதை உள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு ஏதுவாக சென்னை எழும்பூர் – மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் – திருநெல்வேலி – நாகர்கோவில் – கன்னியாகுமரி பாதையும் உள்ளது.எழும்பூர் – மதுரை – கன்னியாகுமரி வரையும் இயக்கப்படும் ரயில்களை விட கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டுமானால், இந்நகரங்கள் இடையே இரண்டாவது ரயில் பாதை மிகவும் அவசியம். செங்கல்பட்டு – விழுப்புரம் இடையே இரண்டாவது அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. விழுப்புரம் – திண்டுக்கல் இடையே இரண்டாவது பாதை அமைக்க நான்காண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. இப்பாதை மிகவும் முக்கியமானது என்ற நிலையிலும், ரயில்வே பட்ஜெட்டில் இவ்வாண்டு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்பாதைக்கு 150 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையிலும் கடலோர மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள திருவாரூர் – காரைக்குடி இடையே மீட்டர் கேஜ் பாதை அமைக்கும் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி, திருத்துறைபூண்டி – அகஸ்தியம் பள்ளி, நீடாமங்கலம் – மன்னார்குடி மற்றும் மன்னார்குடி – பட்டுக்கோட்டை (புதிய பாதை) அமைக்கவும் சேர்த்து மொத்தமாக 272 கி.மீ., பாதை அமைக்க பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் மட்டுமே இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போதைய நிலையில் மொத்தத்தில் 50 கி.மீ., பாதை கூட முழுவதுமாக அமைப்பது சிரமம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.திண்டுக்கல் – பொள்ளாச்சி – பாலக்காடு, மதுரை – போடிநாயக்கனூர் (மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கவும்) செங்கல்பட்டு – விழுப்புரம் இடையே இரண்டாவது பாதை அமைக்கவும் இவ்வாண்டு எதிர்பார்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை

.திருநெல்வேலி – தென்காசி, செங்கோட்டை – புனலூர் இடையே 125 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு இவ்வாண்டு 75 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டப் பணிகள் காலதாமதமடையும் நிலையே உள்ளது.”மதுரை – போடிநாயக்கனூர் – கோட்டயம் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டால், தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே உள்ள வர்த்தக தொடர்புகள் மேம்படும்; போடியிலிருந்து தினசரி 60 லாரிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. தற்போது தினசரி 120 லாரிகளில் அரிசி, பருப்பு போக்குவரத்து நடந்து வருகின்றன. காய்கறிகள், பழங்கள், திராட்சை, மாம்பழம், ஏலக்காய், பருத்தி, தீப்பெட்டி இவைகள் தினசரி அனுப்பப்படுகிறது.

கேரளாவிலிருந்து வாசனை பொருட்கள், ரப்பர், முந்திரிப் பருப்பு, தேங்காய், கோழி தீவனங்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. சிமென்ட், உரம் இவைகளுக்கும் கேரள மாநிலம் தமிழகத்தையே நம்பியுள்ளது.மதுரை – போடிநாயக்கனூர் இடையே மீட்டர் கேஜ் பாதையுள்ளது. அப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யாத வகையில் இந்த பாதை இருப்பதால், இப்பாதை பலனின்றி உள்ளது. இப்பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படுவதற்காக தற்போது மூடப்பட்டுள்ளது.இத்துடன், போடிநாயக்கனூரிலிருந்து கோட்டயம் வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இப்பாதை அமைந்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், இடுக்கி மாவட்ட மக்கள் பெரும் பலனடைவர். இதற்கு தெற்கு ரயில்வே உடனே முயற்சி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Source & Thanks :  Dinamalar

Leave a Reply

Your email address will not be published.