மேற்கு நாடுகள் தலையிட்டால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும்; கடாபி எச்சரிக்கை

லிபியாவில் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் எச்சரித்து உள்ளன.

பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து எச்சரித்தது.

அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.

மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.

அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

2 Responses

 1. ஈழத்தமிழன்

  ஈழத்தில் எமது மக்கள் மீது குண்டு வீசும் போது ..இவர்கள்
  உறங்கிக் கொண்டா இருந்தார்கள் ?
  தமிழன் இடம் சுரண்ட ஒன்றும் இல்லை என்றா ?

 2. ஈழத்தமிழன்

  ……கலைஞரின் நாடகம் 1 நாளில் முடிவுக்கு வந்தது.
  08 March, 2011 by admin
  நடைபெறவுள்ள தமிழ் நாடு தேர்தலில் 63 இடங்களை காங்கிரஸ் கோரியதால், தாம் கூட்டணியில் இருந்து விலகுவதாக தடாலடியாக அறிவித்தார் கலைஞர். இதனால் மத்திய அரசின் ஆட்சி கலையலாம் என்ற நிலை கூடத் தோன்றி இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வழமையாக இவர் இப்படி பூச்சாண்டி காட்டி கடைசியில் காங்கிரஸ் காலில் விழுவாரோ அவ்வாறே திரும்பவும், இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார். ஈழத் தமிழருக்காக 1 நாள் உண்ணாவிரதமிருந்த அரசியல் கோமாளியான கலைஞர் இவ்வாறு அந்தர் பெல்ட்டி அடிப்பார் என அனைவரும் எதிர்ப்பாத்தனர்.

  தற்போது காங்கிரசுக்கு 63 இடங்கள் வழங்குவதற்கு தி.மு.க., இணங்கியதை அடுத்து இருகட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று (மார்ச் 8) கையெழுத்தாகவுள்ளதாக தி.மு.க தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ம.க.,வுக்கு வழங்கப்பட்டுள்ள 31 ஆசனங்களில் இருந்து மூன்றை காங்கிரசுக்கு வழங்க தி.மு.க., முடிவு செய்திருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  ———————————————————————————————————
  அரசியல் கோமாளியான கலைஞர் அவர்களின் நாடகம் ஒருநாளில் முடிந்து விடும் .
  இவரை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் .தமிழ் நாட்டு மக்களுக்கு எனது ஆள்ந்த அனுதாபம் ………………………………………………………………………
  ஈழத்தமிழன்!

Leave a Reply

Your email address will not be published.