ஐபி முகவரிகள் காலி-இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6

லண்டன்: தற்போது நடைமுறையில் உள்ள ஐபி (Internet Protocol) முகவரிகள் இன்றுடன் காலியாகின்றன. இது வெர்சன் 4 ஆகும். இதைத் தொடர்ந்து புதிதாக வெர்சன் 6, ஐபிவி6 அமலுக்கு வருகிறது.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஐபி முகவரி உண்டு. முன்பு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இன்று கணக்கில் அடங்காத அளவுக்கு பெருகிப் போய் விட்டதால் ஐபி முகவரிகள் காலியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் வசதியுடன் கூடிய செல்போன்களின் பெருக்கம்தான். இதையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள ஐபி4க்குப் பதில் ஐபிவி 6ஐ அமல்படுத்துகின்றனர்.

தற்போது உள்ள ஐபி முகவரி முறை 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபட்சம் இதில் 4.1 பில்லியன் முகவரிகளைத்தான் கொடுக்க முடியும். இந்த அளவை எட்டாது என்று அப்போது நினைத்தார்கள். கல்விக்காக மட்டுமே இணையதளத்தை மக்கள் பயன்படுத்துவார்கள் என்பது இணையதளத்தை உருவாக்கியவர்களின் நினைப்பாக இருந்தது. ஆனால் இன்றுதான் முருகன்.காம், முஸ்தபா.காம், இம்மானுவேல்.காம் என ஏகத்திற்கும் இணையதளமாகி விட்டதே. இதனால் இந்த முகவரிகள் காலியாகி விட்டன.

இந்த வரிசையில் கடைசி ஐபி முகவரிகள் நேற்று விநியோகிக்கப்பட்டன. இன்றுடன் இவை முடிவுக்கு வருகின்றன. இனிமேல் கொடுக்கப்படும் ஐபி முகவரிகள், புதிய ஐபிவி 6 மூலம் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.