முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளுக்கு, தியாகராஜன் எழுதும் மடல்.

முத்துக்குமார்,….
முத்துக்குளிக்கும் ஊரில் முத்தாய் பிறந்தவன்,
முள்ளிவாய்க்கால் முடிவை முன் கூட்டியே அறிந்தவன்;
நிலைகுழைந்த எம் நெஞ்சத்துள்,
நினைவுச்சிலையாய் நிற்ப்பவன்;
இனியும் நாம் அமைதியாய் இருப்பது,
எம் இனத்தை நாமே
புதைகுளிக்குள் போட்டதாய்
போய்விடும் என்றெண்ணி
புயலாய் புறப்பட்டவன்,
மரணத்துயர் சுமந்து நாம் மாறாவேதனையில்
வீற்றிருந்த நேரமதில்,,
மக்கள் மடிந்து கொண்டிருக்கையிலே,
மானாட மயிலாட- வில்
மணம் உருகி மண்டியிட்டு கிடந்தோரை.,
சொந்த இனம் அழிவதைக் கண்டும்,,
கண்டும் காணாமல்,
கவலையற்று சொரனைகெட்டு கிடந்தோரை,,
இனம் அழுதபோதும், ஈழம் அழிந்தபோதும்,,

நமக்கு என்ன என
நடுமரமாய் நின்றோரை,,
திரையரங்க வாசலில்,
வெட்டி பேச்சு பேசித் திரிந்த வீரதீரரை,,
எதை எவன் தருவான் என
இலவசத்துக்கு ஏங்கி கிடந்தோரை,,
இனம் காக்க இனமாணம் காக்க, இனியும்
இப்படி இருக்காதீர் எனச்சொல்லி
இடிமுழக்கமாய் எழுந்தவன், ஆம்
அன்றொரு நாள் அதிகாலை வேளை
விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய்
என் தமிழ் சாதியை என தொடங்கி,,,,
உழைக்கும் தமிழ் மக்கள், சட்டக்கல்லூரி,
மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,, தமிழ்நாடு வாழ்
வெளிமாநில சகோதர, சகோதரிகள்,,
தமிழ்நாடு
காவல்துறையில் பணியாற்றும் இளைஞர்கள்,
களத்தில் நிற்கும் தமிழ் ஈழ மக்கள்,
விடுதலை புலிகளென,
விளாவாரியாய் பட்டியலிட்டு
விவரம் சொல்லி வீதியெங்கும் வினியோகித்து,
தமிழரின் தாகம் தீர்ந்திட தீயள்ளிக் குடித்தவன்,
நெருப்பாற்றில் குளித்தவன்,,

அன்று தம்பி தங்கையென ஒன்றை
தனக்கென கொண்டவன், இன்று தரணிவாழ்
தமிழரையெல்லாம் தமக்காக்கி கொண்டவன்,,
பள்ளி பருவம் தொட்டே, பலரும் போற்றும் வண்ணம்.
பலதுறையில் பாராட்டும் பெற்றவன்,,
இருப்பதிஆறே வயதில் இருவேறு துறைகளில்
உடனிருந்தோர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டவன்,,

உள்ளூர் அறியா நம் உரிமைப்போரை ஒரேநாளில்
உலகறியச்செய்த உத்தமன்,,
இவர் வரலாறு இவ்வாறு பல இருக்க இவனோடு
இணைந்தனர் பதினாறு பேர்.

பைத்தியம் அறியுமா?, இதை,, பைத்தியம் ஒன்று
பத்திரிக்கையாளாரிடம் கேட்டதாம்,
முத்துக்குமாரா? யார் அது?  பைத்தியத்தின் கேள்வி இது,
பைத்தியம் அறியுமா?  பைந்தமிழன் வரலாறு,,
பலரும் பைத்தியத்துக்கும் பதில் சொன்னர்.
நானும் சொன்னேன், நல்விளைந்த முத்து அது
நற்றமிழன் சொத்து அது.,, நாளை மலரும்
தமிழீழத்தின் வித்து அது என்று, அந்தப்
பைத்தியமும் தெளியும், பழந்தமிழர்
வாழ்வும் சிறக்கும், என்றாவது ஒரு நாள்
ஈழம் பிறக்கும் எனும் முதிர்ந்த
நம்பிக்கையுடன், முத்துக்குமாரையும், அவரோடு
இனைந்திட்ட பதினாறு பெயரையும்
நினைவு கொள்வோம்.

1. முத்துக்குமார்,
2. பள்ளப்பட்டி இரவி.
3. சீர்காழி இரவிசந்திரன்
4. சென்னை அமரேசன்,
5. கடலூர் தமிழ்வேந்தன்.
6. சென்னை சிவப்பிரகாசம்.
7. விருதுநகர் கோகுலகிருட்டிணன்.
8. வாணியம்பாடி சீனிவாசன்.
9. சென்னை சதாவிவம் சிறீதர்.
10. கடலூர் நாகலிங்கம் ஆனந்த்.
11. ஜெயங்கொண்டம் இராசசேகர்.
12. புதுக்கோட்டை பாலசுந்தரம்.
13. சிவகாசி மாரிமுத்து.
14. கரூர் சிவானந்தன்.
15. பண்ருட்டி சுப்ரமணி.
16. மலேசியா ஈழத்தமிழர் இராசா.
17. சுவிச்சர்லாந்து வர்ணகுலசிங்கம் முருகதாசன்.

இவர்களது இரண்டாம் ஆண்டு நினைவுநாளில்
இணைந்து பிரார்த்திப்போம், அவர்களது
இதயம் அமைதிகொள்ளட்டும்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *