தமிழ்ப் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துகள் !

ஞாலம் தன்னைத்தானே சுழன்று இயல்பு வாழ்வுக்கு

துணை நிற்பதுபோல் இருபத்து நான்கு மணிநேரமும்

தொடர்ந்து தமிழ்ச்சேவை புரியும் தமிழொலி தம்

பதினான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்

நாளில் தமிழொலியை இயக்கும் கலையகத்தார்,

அதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு நல்கும்

அனைவருக்கும் என் உள்ளங்கனந்த இனய வாழ்த்துகள்.

அத்துடன்..

தமிழ்ப் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துகள் !

டந்தவைகளை எண்ணி வெம்பிடாமல்

நடக்காமல் போனதேன் எண்ணிடுவீர்

எண்ணுதல் வேண்டும் எண்ணியப்படி

நடந்திடல் வேண்டும் தமிழர்காள் !

நாம் தமிழர் நம்மொழி செம்மொழி கண்டீர்

முன்னைமுதல் தமிழர்க்கு தன்னுரிமைப்பெற்ற

மண் இருந்தமை கேட்டீர், அறிந்தீர் அன்றோ!

வந்தேறிகள் நம் மடமைதனை கண்டு சாதிமத

மூடமுட நாற்றத்தை புகுத்தி எமக்குள் பிளவுகள்

உண்டாக்கி எம்மை பிரித்தாண்டு மண்ணிழக்க செய்து

இன்றுவரை ஒன்றுசேர முடியா நிலைக்கு ஆளாகினோம்

உணர்ந்திடுவீர்!அஃது நம் மண் மீட்புக்கு தடையாய்

உள்ளதை உணரவீர்!இனியும் நாம் நம்

இயல்புதனை எண்ணி நமக்குள் வேறுபாடுகளை கலைந்து,

இத்தனைக் காலம் நாம் தமிழர் என்றோம்

தமிழ் வாழ்கவென்று கூப்பாடிட்டோம் எனினும்

மாறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்தோமில்லை

மாற்றானுக்கு விலைபோய் எம்மினத்தைக்

காட்டிக்கொடுப்பதினால் வந்த,வரும் கேட்டினை

உணர்ந்தோமா அனைத்துவகையிலும் எம்

தமிழை நிலைநிறுத்தி, வளப்படுத்தி தமிழன் என்னும்

அடையாளத்தை வெளிப்படுத்தினோமில்லை!

தமிழர்தம் எழுச்சிதனை முடக்க எதிரிகளோ பலர்

இனியும் காலத்தை கடத்தவிடாமல் மடமைகளை

போ(க்)கிமுற்போக்கு எண்ண பொங்கலிட்டு

துணிவுடன் வள்ளுவத்தை ஏந்தி தமிழ்ப்புத்தாண்டில்

உலக அரங்கில் தமிழர் தலை நிமிர சூளுரை ஏற்பீர்!

அதனை தமிழரின் உள்ளத்தில் பரப்பிடுவீர்

ஒன்றுசேர்வீர் , செயலாற்றுவீர் வெற்றிக்காணுவீர்!!!

இவண்

ஆம்பூர் பெ.மணியரசன்

Leave a Reply

Your email address will not be published.