கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: எடியூரப்பாவின் நிலை என்ன?

எடியூரப்பாவிற்கு அரசியல் ரீதியாக பல இடையூறுகள் வந்தாலும், மிக சாதுர்யமாக பிரச்சனைகளைச் சமாளித்து முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

ரெட்டி சகோதரர்கள் நடத்தும் குவாரிகள், எடியூரப்பாவின் மகனுக்கு அரசு நிலம் வழங்கிய பிரச்சனை, பா.ஜ., கட்சி பிளவின் காரணமாக கவர்னருடன் ஏற்பட்ட மோதல் என பல பிரச்சனைகள் வந்தாலும்,அனைத்தையும் சமாளித்து பதவியை தன்வசம் கொண்டுள்ளவர் தான் எடியூரப்பா.

ஆனால், இந்த தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் உட்பட பல கட்சிகளும் தங்களின் பலத்தை காட்டுவதற்காக தனித்தனியே களம் இறங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 26, 31 மற்றும் ஜனவரி 1ம் திகதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 171 மையங்களில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்றே இதன் வாக்கு முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவு வந்ததும், மக்கள் மத்தியில் எடியூரப்பாவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

பஞ்சாயத்து தேர்தலுக்கு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களித்தவர்கள் இம்மாநில மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவினை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.