இந்தியாவில் முதல் கிளை திறந்தது ‘கேர்போர்’!

posted in: வர்த்தகம் | 0

டெல்லி: சில்லறை வணிகத்தில் சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கும் கேர்போர் நிறுவனம் தனது முதல் கிளையை டெல்லியில் தொடங்கியது.

ஆனால் சில்லறை வர்த்தகமாக இல்லாமல் பணம் கொடுத்து மொத்தமாக வாங்கிச் செல்லும் வகையில் டெல்லி சீலாம்பூர் மெட்ரோ மாலில் பெரிய கிளையாக இதனைத் திறந்துள்ளனர்.

‘கேர்போர் வோல்சேல் கேஷ் அண்ட் கேர்ரி’ எனும் பெயரில் அமைந்துள்ள இந்த கிளையில் மொத்தம் 10000-க்கும் அதிகமான பொருள்கள் மொத்தமாக விற்கப்படும். இந்தப் பொருள்களை எப்போது கேட்டாலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கும் வசதி இந்தக் கிளையில் உள்ளது. உள்ளூர் கடைக்காரர்கள், வணிக நிறுவனங்கள், பெரிய கேன்டீன்கள் போன்றவற்றுக்கு பொருள்களை மொத்தமாக வாங்குவது இனி ஒர் இடத்தில் சுலபமாக இருக்கும்.

இதுபோன்ற கேஷ் அண்ட் கேர்ரி கிளைகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் அமைக்க மிகவும் விரும்புவதாக கேர்போர் சிஇஓ லார்ஸ் ஒலோப்ஸன் தெரிவித்தார்

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.