ஊழல் நடந்த இடத்திலேயே தண்டனை அறிவிக்கும் சட்டம் தேவை

பெங்களூரு : “”ஊழலில் ஈடுபட்டிருப்பது உறுதியான உடனேயே தண்டனை அளிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்,” என, லோக் ஆயுக்தாவை சேர்ந்த சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக, விவசாய வல்லுனர்களின் மையத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் கூறியதாவது:ஊழலில் ஈடுபடுபவர்களின் வழக்கு, நீதிமன்றத்தின் நீதிபதிக்கு முன்னே வர பல ஆண்டுகள் பிடிப்பதால், இந்த முறை ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. இதனால், ஊழல் நடந்த இடத்திலேயே தண்டனையை அறிவிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.சுப்ரீம் கோர்ட்டில், ஊழல் செய்த ஒருவரின் வழக்கு, 18 ஆண்டுகளுக்கு பிறகு, நீதிமன்றத்திற்கு வந்தது. இப்போது அவருக்கு 80 வயதை தாண்டியுள்ளது. அவர் இனி எத்தகைய தண்டனையை அனுபவிக்கவுள்ளார். மாநில அரசிலும் ஊழல் தாண்டவமாடுகிறது.

லோக் ஆயுக்தா அதிகாரிகள், ஊழல் தொடர்பாக 20 முதல் 25 சதவீத வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், இடமாற்றம் பயத்தால், 85 சதவீதத்தினர் லோக் ஆயுக்தா போலீசாரின் சட்ட விதிக்குட்பட்டு, விசாரணை நடத்த பின்வாங்குகின்றனர்.லோக் ஆயுக்தா போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் முடிவு, சி.பி.ஐ., விசாரணை முடிவுக்கு ஏற்ப உள்ளது. வழக்குகளை விசாரித்து முடிப்பதில் இத்தகைய தாமதங்கள் உள்ளதால், ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மேலும் பல குற்றங்களை செய்து, தப்பித்துக் கொள்ள காரணம் இருப்பதன் பின்னணியில், இதற்கான சட்டத் திருத்தம் அவசியம்.இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.