ஜனாதிபதியை கைது செய்ய வைப்பதே எமது இலக்கு: இராணுவ அதிகாரிகளையும் விட மாட்டோம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்திருக்கும் ஜனாதிபதியை எவ்வகையிலாவது கைது செய்ய வைப்பதே தமது முதன்மை இலக்கு என்று பிரிட்டன் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

அதற்கென பிரிட்டன் தமிழர் பேரவை இங்கிலாந்தின் மிகப் பிரபல்யம் வாய்ந்த சட்ட நிறுவனமொன்றை சேவைக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனாதிபதியைக் கைது செய்விப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆராய்ந்து கொண்டுள்ளதாக தெரிகி்ன்றது.

ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இராஜதந்திர அந்தஸ்திலுள்ள ஜனாதிபதியைக் கைது செய்விக்க முடியாது போனால் அவருடன் கூட வந்திருக்கும் இராணுவ அதிகாரிகளையாவது கைது செய்விப்பது தமிழர் பேரவையின் இலக்காக உள்ளது.

அதற்கான சட்ட நடவடிக்கைகள் முன் கொண்டு செல்லப்படுவதாக பிரிட்டன் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொடூரமாகக் கொல்லப்பட்ட நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்களின் அநியாய மரணங்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை எவ்வகையிலாவது தண்டிப்பதே தமது நோக்கு என்பதாக பிரிட்டன் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.