மும்பை தீவிரவாத தாக்குதல்-ஸ்பெயின் நாட்டில் 8 பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர் கைது

மேட்ரிட்: 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் நாட்டில் 8 பாகி்ஸ்தான் நாட்டினரும் ஒரு வட ஆப்பிரிக்க நாட்டவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்த இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியது தெரியவந்துள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவினர் தந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் பிடிபட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுடன் இவர்கள் நேரடியாக தொடர்பி்ல் இருப்பதும் உறுதியாகியுள்ளது.

மும்பையில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளிடமும் போலி இந்திய அடையாள அட்டைகள் இருந்தன. இந்த அட்டைகளைத் தயாரித்து தந்தது இவர்கள் தான் என்று ஸ்பெயின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read: In English
இந்த 8 பேரும் பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன் ஐரோப்பாவில் தான் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.