நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது-மத்திய அரசு

டெல்லி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியா வில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசுஎச்சரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு, உலகம் முழுக்க பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடர்பாளரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “இவ்வாறான தேர்தல் எதையும் இந்தியாவ்ல் நடத்த முடியாது. அதனை இந்திய அரசு அனுமதிக்காது. மீறி நடந்தால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 1992ம் ஆண்டு தடை செய்தது. இந்தத் தடை இன்று வரை தொடர்கிறது.

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் யுத்தம் நிறைவடைந்த போதும், இந்தத் தடை விலக்கப்படவில்லை. இன்னும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.