சோனியா,பிரதமர் சிங்கிற்கு அதிக செல்வாக்கு:போர்பஸ் தேர்வு

போஸ்டன்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும் காங்,,கட்சிதலைவருமான சோனியா பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் டாடாகுழுமத்தைசேர்ந்த ரத்தன்டாடா ஆகியோர் உட்பட ஐந்து பேர் சிறந்த மனிதர்களாக போபர்ஸ் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தைசேர்ந்த அம்பானி, மற்றும் ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் சேர்மன் லட்சுமிமிட்டலும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். உலகம் முழுதும் மக்கள் சக்தி மிக்க தலைவர்கள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த போர்பஸ் பத்திரிகை நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. 68 பேருக்கும் மேற்பட்டோரை கணக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தது. இதனடிப்படையில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ உலகின் சிறந்த தலைவராக முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் காங்.,கட்சிதலைவர் சோனியா மக்கள்சக்தி மிக்க பெண் தலைவர் என்ற அடிப்படையில் அவர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்திய பிரதமர்களில் சிறந்த பிரதமராக மன்மோகன்சிங் 18-வது இடத்தை பிடித்துள்ளார். இவரே கடந்த ஆண்டு 36-வது இடத்தில் இருந்தார். சிறந்த பொருளாதார அறிஞர் என பிரதமர்சிங்-கை போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வகிதம் 8 சதவீத அளவில் இருக்கும் என்றும் அதே சமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 9 சதவீத அளவாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சிவங்கி கணித்துள்ளதாக போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு 44 வது இடத்தில் இருந்த அம்பானி இந்த ஆண்டு 34 இடத்திற்கு முன்னேறி உள்ளார். 53வயதாகும் அம்பானி வர்த்த உலகத்தின் ராஜா என வர்ணித்துள்ளது. அதே போல் கடந்த ஆண்டு 55 வது இடத்தில் இருந்த ஆர்சிலெர் மிட்டல் நிறுவனத்தின் லட்சுமிமிட்டல் இந்த ஆண்டு 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகிலேயே குறைந்த விலையில் கார்களை தயாரித்து வழங்கிய ரத்தன் டாடா வுக்கு 61-வது இடத்தை போர்பஸ் பத்திரிகை வழங்கியுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.