ராகுல் காந்தி இளைஞர் அல்ல; ஆனால் ஓடி, ஓடி உழைப்பதை பாராட்டுகிறேன்” வருண் காந்தி பேட்டி

ராகுல் அண்ணன் இளைஞர் அல்ல. என்னைவிட 10 வயது மூத்தவர். ஆகவே அவர் நமது இளைஞர் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல.

ஆனாலும் அவர் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து குறைகளையும், மக்களின் பிரச்சினைகளையும் அறியவும், தனது மக்களுக்காக ஓடி, ஓடி உழைப்பதையும் பாராட்டுகிறேன்” என்று சித்தப்பா சஞ்சய் காந்தியின் மகனும், பா.ஜனதா கட்சி செயலாளரும், எம்.பி.யுமான வருண் காந்தி கூறினார்.

லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ராகுல் உ.பி. மாநிலம் முழுவதும் ஓடி, ஓடி பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, தீர்க்க முயன்றாலும், இந்த நாட்டின் இளைஞரான அவர் இந்த தேசத்தின் குறிக்கோளை எட்ட முன்வர வில்லை” என்றும் வருண் கூறினார்.

“நான் எம்.பியாக தேர்ந்து எடுக்கப்பட்டது முதல் எனது சம்பளத்தில் ஒரு பைசாவை கூட எனக்காக செலவழிப்பது இல்லை. அனைத்தையும் மக்களுக்காக அளித்து விடுகிறேன். நான் மக்களுக்காக உழைக்கவே அரசியல் நடத்துகிறேன், பணம் சம்பாதிக்க அரசியல் நடத்த வில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.