மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான சூழலில் தீபாவளியை கொண்டாட இந்து மக்கள் ஆயத்தம்

யுத்தம் நீங்கி முழுமையான சமாதானச் சூழலில் இம்மாதம் 5 ம் திகதி மலரவிருக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இந்து மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பகுதிகள் உட்பட சலக பகுதிகளிலும் தீபாவளிக்கென பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி, மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, செங்கலடி உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ஜவுளி மற்றும் பாதணிகள் உட்பட பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இம்முறை தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவிலான தென்னிலங்கை வர்த்தகர்களும் கிழக்கு மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Source & Thanks : lankasri

Leave a Reply

Your email address will not be published.