லாலு, ராப்ரி திருந்தப் போவதேயில்லை: நிதீஷ்குமார்

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியும் திருந்தப் போவதேயில்லை என்று நிதீஷ் குமார் கூறினார்.

தேர்தல் பொதுக் கூட்டத்தில் நிதீஷ் குமாரை நேர்மைற்றவர் என்றும் அவரை திருடன் என்றும் விமர்சித்து பேசியிருந்தார் ராப்ரி. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார் நிதீஷ் குமார்.
தங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிருவரும் உறுதியாக உள்ளனர். எனவே அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டார். பங்கிபோரா சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
நாம் இப்படி இருக்கிறோம். இப்படியேதான் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மாறவே கூடாது என்றே அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

இதற்கு முன்பு அவர்கள் எப்படியிருந்தார்கள் என்பதை அறிவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பார்கள் என்று நிதீஷ் குமார் குறிப்பிட்டார்.

ரவிசங்கர் பிரசாத் கருத்து:
ராப்ரி தேவி தெரிவித்த கருத்துகள் தங்களுக்கு எவ்வித வியப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் இருவரும் எத்தகைய சிந்தனை உடையவர்கள் என்பது தெரிந்தபிறகு அந்தத் தம்பதியிடமிருந்து நல்ல கருத்துகளை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

குறைந்தபட்சம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்ற வகையிலாவது நாகரிகமாக பேசியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.