பார்ச்சூன் 2010 சிறந்த தொழிலதிபர் விருதுக்கு ரத்தன் டாடா பெயர் பரிந்துரை

பாஸ்டன் / டெல்லி : பார்ச்சூன் பத்திரிக்கையின் 2010 ம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த தொழிலதிபர் விருதுக்கான இறுதிப் போட்டிக்கு டாடா குழுமத் தலைவர்ரத்தன் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ளார் டாடா என்று பார்ச்சூன் புகழாரம் சூட்டியுள்ளது.

நவம்பர் 18 தேதி வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. இந்த விருதுக்காக உலகின் டாப் தொழிலதிபர்களான வாரன் பஃபே, ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ், கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட், டூபான்ட் சிஇஓ எல்லன் குல்மான், மெக்டொனால்டின் ஜேம்ஸ் ஸ்கின்னர் உள்பட 32 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் ரத்தன் டாடா உள்ளிட்ட 8 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

மிகக் குறைந்த விலையில் அதிநவீன நானோ காரை அறிமுகப்படுத்தியது, அதி நவீன உயர் ரக ஜாகுவார் காருக்கு மறுவடிவம் கொடுத்து வெளியிட்டது போன்ற பல்வேறு சாதனைகளை ரத்தன் டாடா செய்துள்ளதாகவும் ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.