எண்ணெய் கசிவால் 6,000 கோடி ரூபாய் நஷ்டம்

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி:மும்பை அருகே பனாமா நாட்டு கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண் ணெய் கசிவால், இங்குள்ள துறைமுகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, பாரதிய ஜனதா உறுப்பினர் கோபிநாத் முண்டே கூறியதாவது:மும்பை அருகே கடந்த வாரம் பனாமா நாட்டு கப்பல் கள் சித்ராவும், கலீஜாவும் மோதிக் கொண்டதில் சித்ரா கப்பலில் இருந்து கசிந்த எண் ணெய், 100 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளது. இதனால், மீனவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மும்பை துறைமுகத்தில் ஒரு லட்சம் கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.

மோசமான நாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். அரசு துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம்.கப்பல்கள் மோதல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு கோபிநாத் முண்டே கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.