தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு: அமெரிக்க அமைப்பின் அறிக்கையில் தகவல்

வாஷிங்டன், ஜூன் 21: தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என அமெரிக்க சிந்தனையாளர்கள் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

÷ராண்ட் கார்ப் என்ற சிந்தனையாளர் குழு அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இதனிடம் இருந்து அமெரிக்க ராணுவத் தலைமையகமும் சில நேரங்களில் அறிக்கையை கேட்டுப் பெறுவதுண்டு.

÷அந்த அமைப்பு பாகிஸ்தான் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

÷தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை தனது கொள்கையாகவே பாகிஸ்தான் கொண்டுள்ளது. அதன் இந்த முடிவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

÷தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை நிறுத்தச் செய்வதையே தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு அமெரிக்கா செயல்பட வேண்டும்.

÷ சீனாவில் கலவரம் நிகழக் காரணமாக இருந்த உய்குர் குழுக்கள் பாகிஸ்தானையே புகலிடமாகக் கொண்டுள்ளன.

இதனால், தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது குறித்து சீனாவும் கவலை கொண்டுள்ளது.

÷2010-ல் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட முக்கிய தலிபான் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் நிலையில் தற்போது சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது.

÷இருப்பினும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த முயன்று கைதாகியுள்ளனர்.

இன்னமும், தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

÷பாகிஸ்தானில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நிதி உதவியாக அமெரிக்கா அளிக்கிறது. ஆனால், அவ்வளவு நிதி செலவழிப்பதற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை.

÷தெற்கு வஜீரிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

÷செலவழிப்பதற்கேற்ற பலன் இல்லாததால், நிதி உதவி அளிப்பது குறித்து அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : sinamani

Leave a Reply

Your email address will not be published.