72 வயதில் 3 வது பெற்று சாதனை !

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த 72 வயது கொண்ட வாலிபர் தற்போது 3 வது குழந்தைக்கு தந்தையாகிறார். நான் இன்னும் ஒன்று பெறுவேன் என்ற நம்பிக்கை இப்போது நடந்துள்ளது, இதனால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

பிரிட்டனில் மேற்கு மிட்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட்டு ரோடன். இவர் லிசா என்ற 26 வயது மங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டில் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தற்போது வயது 16 மாதங்கள் ஆகிறது . மீண்டும் இளம் மனைவி லிசா கர்ப்பம் ஆகியுள்ளார்.

2 மாத கர்ப்பம் அடைந்துள்ள லிசா இது குறித்து கூறுகையில் ; என்னால் இதனை நம்பவே முடியவில்லை அதற்குள் இது எப்படி நடந்தது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது என்றார் , மேலும் அவர் கூறுகையில் எங்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இது , ரிச்சர்டு இப்போதும் 20 வயது இளைஞராகவே இருக்கிறார். இன்னும் ஒரு குழந்தை பிறந்தவுடன் நான் 3 வயதுக்குட்டபட்ட 3 குழந்தைகளை பெற்றவளாக இருப்பேன் என்கிறார் மகிழ்ச்சியாக.

ரிச்சர்டு இது குறித்து கூறுகையில் ; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நினைத்தது நடந்திருக்கிறது. வெஜிடபிள் விரும்பி சாப்பிடுவதால் இப்படி பலமாக இருக்கிறேன் என்று தோளை உயர்த்துகிறார் ராபர்ட். 72 வயதிலும் குழந்தை பெற்று உலக அளவில் இவர் சாதனை பேசப்பட்டாலும் 1948 ல் அமெரிக்காவை சேர்ந்த டாம்லாம்பர்ட் என்பவர் தனது 78 வயதில் ஒரு குழந்தையை பெற்றார் என்ற ரிக்கார்டு வேறு இருக்கிறது.

தற்போது ரிச்சர்டை அந்த குழந்தைகளுக்கு அவர் தாத்தாவா என இப்பகுதி மக்கள் கேலி செய்கிறார்களாம்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.