பாக்.,கில் தீவிரவாதம் ஏக வளர்ச்சி ; ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவரை மீட்கவந்த பயங்கரவாதிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிகிச்சை பெற்றுவந்த சக பயங்கரவாதி ஒருவனை துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள் கண்ணில் கண்டவர்களை சுட்டு மீட்டு சென்றனர்.

சமீப காலத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாக இருக்க முடியாது. லாகூரில் உள்ள ஜின்னா ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் 4 பயங்கரவாதிகள் கையில் உயர்ரக துப்பாக்கியுடன் நுழைந்தனர்.

அவர்கள் போலீஸ் உடை அணிந்திருந்தனர். அங்கு வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் எமர்ஜென்சி வார்டு பிரிவு எங்கே இருக்கிறது என கேட்டனர். போலீசார் சுதாரித்துக்கொள்வதற்குள் துப்பாக்கியால் சுட்டு மேலும் முன்னேறினர். செல்லும் வழியில் சிலரை சுட்டு கொன்றனர். தகவல் அறிந்த போலீஸ் படையினர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு மோதிக்கொண்டனர். மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதில்சிகிச்சை பெற்ற ஒரு பயங்கரவாதியை அவர்களே சுட்டு கொன்று விட்டனர்.

இந்த ஆஸ்பத்திரியில் சுமார் 900 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சப்தம் கேட்ட நோயாளிகள் பதறியபடி தங்களது பெட்களில் ஆங்காங்கே பதுங்கி கொண்டனர். சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நோயாளிகள் திணறினர்.

கடந்த வாரம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். துப்பாக்கி சூடும் நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த நேரத்தில் பயங்கரவாதிகளில் சிலர் காயத்துடன் போலீசாரிடம் சிக்கினர். ஒருவன் அமீர்மாவியா என்பவனும் ஒருவன் . இவனுக்கு ஜின்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமீர்மாவியாவை மீட்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகள் ஆஸ்பத்திரியின் மேற்கூரை வழியாக நுழைந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பயங்கரவாதியை மீட்டு சென்றதாக சிலதரப்பு சொன்னாலும் உயர்மட்ட போலீஸ் தரப்பு இன்னும் நடந்த உண்மை விவரங்களை வெளியிடவில்லை.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.