ஜி-15 நாடுகளுக்கான தலைமை பொறுப்பை ஏற்கிறது சிறிலங்கா

ஈரானில் நடைபெறவிருக்கும் ஜி-15 நாடுகளின் 14 வது மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கிறது சிறிலங்கா. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் மாநாட்டிற்கு அதிபர் ராஜபக்ச இன்று புறப்பட்டுச் செல்வார் என்றும் 17ம் திகதி மாநாட்டில் உரையாற்றுவார் என்றும் குடியரசு அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

18 உறுப்பினர்களை கொண்ட அமைப்பான ஜி-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஈரானிடமிருந்து சிறிலங்கா இந்த மாநாட்டில் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.

மே 17 மற்றும் 18 திகதிகளில் தெஹ்ரானில் நடக்கவிருக்கும் இரண்டு நாள் மாநாட்டில் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களைச் சேர்ந்த 8 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஜி-15 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு தெஹ்ரானில் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொளவதற்காக சிறிலங்க வேயுறவு துறை அமைச்சர் போராசிரியர் ஐி.எல். பீரிஸ் புறப்பட்டுச் சென்றார். வெளியுறவு செயலர் ரொமேஷ் ஜெயசிங்கேவும் அவருடன் கூடவே சென்றார்.

இந்த மாநாட்டில் ஜி-15 நாடுகளின் தற்போதைய முக்கிய பிரச்சினையாக கருதப்படும் நிதி மற்றும் பொருளாதார தேக்க நிலை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஈரான், அல்ஜிரியா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா , மலேசியா, மெக்ஸிகோ, பெரு, செனெகல், சிறிலங்கா, வெனிசுல, மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை இந்த அமைப்பின் பிரதிநிதிகளாவர்.

Source & Thanks : dinamalni

Leave a Reply

Your email address will not be published.