கொப்பரை ஏலம் கிலோ ரூ.31.60

posted in: வர்த்தகம் | 0

பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.60 ரூபாய் விலை கிடைத்தது. ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 26 பேர் 55 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கொப்பரையை ஐந்து வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரசேகர் ஏலம் நடத்தினார். முதல் தர கொப்பரை 40 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 29.50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 31.60 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இரண்டாம் தர கொப்பரை 15 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 25.05 ரூபாய் முதல் அதிகபட்சமாக 26.40 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு 80 பைசா விலை உயர்ந்துள்ளது. அரசு கொப்பரை கொள்முதல் துவங்கியுள்ளதால், ஏலத்திலும் விலை உயர்ந்து வருகிறது. இந்தாண்டு கொப்பரை வரத்து அதிகரிக்காமல் மிதமாக உள்ளதால் கொப்பரை விலை கிலோ 30 ரூபாய்க்கு கீழே செல்லாது’ என்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.