இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளருக்கு அதிபர் ராஜபட்ச பொது​ மன்​னிப்பு

இலங்கை தமிழ்ப் பத்​திரிகையாளர் ஜெய பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அதிபர் மகிந்த ராஜபட்ச.

இத்தகவலை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு திசைநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க முடிவெடுத்தார் ராஜபட்ச என்று பெரிஸ் தெரிவித்தார்.

திசைநாயகத்தை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது இலங்கை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​ ராஜபட்சவின் முடிவை பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையில் அரசை விமர்சித்தும்,​​ விடுதலைப் புலிகளின் செயலை ஆதரித்தும் பத்திரிகையில் எழுதியதாக திசைநாயகம் கைது செய்யப்பட்டார்.​ பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி பயங்கரவாதத்தை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 31,​ 2009-ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திசைநாயகம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம்,​​ அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.​ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும்,​​ பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சுமத்தினர்.​ திசைநாயகத்தை விடுவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் திசைநாயகத்துக்கு அதிபர் மகிந்த ராஜபட்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.