இலங்கை பிரதமராக ராஜபக்சேவின் விசுவாசி ஜெயரத்னே பதவியேற்பு

கொழும்பு: ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திராக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெயரத்னே. கடந்த அமைச்சரவையில் இவர் தோட்டத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவரை பிரதமராக்கியுள்ளார் ராஜபக்சே.

78 வயதான ஜெயரத்னே, நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 20வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

கம்போலா தொகுதியிலிருந்து கடந்த 1970 ஆண்டிலிருந்து வெற்றி பெற்று வருபவர் ஜெயரத்னே. போஸ்ட் மாஸ்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெயரத்னே என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சபாநாயகர் சமல் ராஜபக்சே

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்சே தேர்வாகியுள்ளார். இன்று கூடிய புதிய நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்சே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கடந்த அமைச்சரவையில் துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்.

சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 225 எம்.பிக்களுக்கும் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் ஆளும் ஐக்கிய மக்கள்  சுதந்திரக் கூட்டணிக்கு 144 இடங்கள் உள்ளன. இது மூன்றில் இரண்டு பங்குக்கு 6 இடங்கள் குறைவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 இடங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 இடங்களும் கிடைத்துள்ளன.

பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு வெறும் 7 இடங்களே கிடைத்தன.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.