புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய புதிய உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


பெசில் ராஜபக்ஷ, சுதர்சஷினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த சில முக்கிய அமைச்சர்களுக்கு பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த சில அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டதாகவும், இவ்வாறு சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதுவரையில் அமைச்சரவை சாரா அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து வந்த பலருக்கு பிரதி அமைச்சுப் பொறுப்பு கூட வழங்கப்பட மாட்டாது என அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

திறமையான இளைஞர்களது பெயர்கள் பிரதி அமைச்சுப் பொறுப்புக்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.