சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளக்கூடாது: அமைச்சர் கோ சோக்

சிங்கப்பூர், ஏப்.4: சிங்கப்பூருக்கு வேலை செய்ய வரும் வெளிநாட்டவர்கள் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளக்கூடாது என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் கோ சோக் தெரிவித்தார்.


சிங்கப்பூருக்கு என்று தனித்த சமூக மதிப்பீடும், கலாசாரமும் உள்ளன. இதை வெளிநாட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மதிப்பளித்து சிங்கப்பூர் மக்களோடு மக்களாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூருக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் மக்களோடு பழகுவதில் மொழி ஒரு பிரச்னையாக இருக்கலாம். இதனால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் சிங்கப்பூர் மக்களோடு எளிதில் உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அப்படியில்லாமல் ஏதோ வந்தோம், வேலை பார்த்தோம், சம்பாதித்தோம் என்று இருக்கக்கூடாது என்றார்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.