ஒசாமா ஒளிந்திருப்பது பாகிஸ்தானில்தான் ; அமெரிக்காவுக்கு இப்போது தான் தெரிகிறது

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழும் ஒசாமா பின்லாடன் வேறு எங்கும் இல்லை பாகிஸ்தானில் தான் ஒளிந்து இருக்கிறான் என அமெரிக்க புலனாய்வு ( சி.ஐ.ஏ., ) நிறுவனம் தெரிவித்துள்ளது. மறைந்து இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு பல்வேறு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தி அவ்வப்போது தாக்குதல் வியூகத்தை வெளிப்படுத்தி வருகின்றான் ஒசாமா.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் முதல் அந்நாடு பாதுகாப்பிலே முழுக்கவனம் செலுத்திட வேண்டியுள்ளது. இதனால் வளர்ச்சிப்பணிகள் ஒரு படி பாதிக்கப்பட்டு பின்னுக்கு சென்றது என்றால் உண்மையாகத்தான் இருக்கும்.

வேலை வாய்ப்பை பெருக்குவேன் என்ற இலட்சியத்தோடு ஓபாமா ஆட்சிக்கு வந்தாலும் பெரிய மாற்றம் கொண்டு வரமுடியவில்லை. காரணம் அல்குவைதா உள்ளிட்ட பயங்கரவாதிகளின் குறி அமெரிக்காவை நோக்கியே இருப்பதும் காரணமாகும். உலக அளவில் தலை நிமிர்ந்து நடந்த அமெரிக்கா பயங்கரவாதிகள் பிரச்னையில் சற்று ஆடித்தான் போனது. முக்கிய குற்றவாளியான ஒசாமா பில்லாடனை உயிரோடு பிடித்து விடுவோம் என்று சொல்லிக்கொள்ளத்தான் முடிகிறதேயொழிய பிடித்தபாடில்லை. இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் ஒசாமா தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவு நிறுவன ( சி.ஐ.ஏ., ) நிறுவன இயக்குனர் , லியான்பனேட்டா கூறியுள்ளார்.

இவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அல்குவைதா பயங்கரவாத அமைப்பு மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை ஒழிப்பது முக்கிய பணியாகும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அமெரிக்கர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் அந்த அமைப்பினர் வேரோடு ஒழிக்கப்படுவர். ஒசாமா பின்லாடன் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் முக்கிய நபர் அயுமான் அல்சவாரி பாகிஸ்தானில்தான் பதுங்கி இருக்கின்றனர் . வடக்கு மலை பகுதியான வடக்கு வரிஜிஸ்தான் அல்லது அதன் சுற்றுப்பகுதியில் தான் பதுங்கி இருக்க வேண்டும். பாகிஸ்தான் துணையுடன் அவரை கைது செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.