வடபகுதிக் காடுகள் பற்றிய புதிய வரைபடம் தயாரிக்க அமெரிக்கா உதவி

இலங்கையின் வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பான வரைபடங்களைத் தயாரிப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பாக வரைபடங்கள் எதுவும் கடந்த இருபது வருடங்களாகத் தயாரிக்கப்படவில்லை.

போரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் [USAID] வடபகுதிக் காடுகள் பற்றிய புதிய வரைபடங்களை தயாரிப்பதற்கு உதவிகளை வழங்கியுள்ளது.

வடபகுதியில் உள்ள காடுகள் தொடர்பான புதிய வரைபடங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மென்பொருள், நவீன கருவிகள் மற்றும் வன வளத் திணைக்கள அதிகாரிகள் ஆறு பேருக்கான மூன்று நாள் பயிற்சிகளையும் அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது.

Source & Thanks : .puthinappalakai.

Leave a Reply

Your email address will not be published.