பாதுகாப்பு படையில் பெண்களுக்கு அதிகாரம்

புதுடில்லி: இந்திய பாதுகாப்பு முப்படை மற்றும் விமான படையில் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கவும் , ஆண்களுக்கு இணையான அதிகாரம் மற்றும் சலுகைகள் வழங்கவும் டில்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவர் தங்களது உரிமைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் . இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே., கவுல், எம். பி., கார்க் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. மனுவை விசாரித்த கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பில் பாதுகாப்பு மற்றும் விமான படையில் ஆண்களுக்கு நிகராக அனைத்து சலுகைகள் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வழி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்களுக்கு இணையான பணி்க்காலமும் ( சர்வீஸ் ) வழங்கப்பட வேண்டும். மேலும் பெண்களின் தேவைகள் தொடர்பாக நிரந்தர ஆணையம் அமைத்து அவர்களது குறைகள் களையப்பட வேண்டும். பணியில் ஓய்வு பெற்றாலும் அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கலாம். வாய்ப்பு கொடுக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பு இந்திய விமான படையில் பணியாற்றும் பெண்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது என பணியில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.