அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது: ஹக்கீம்

அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கி ழமை நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் மீது அமைச்சரொருவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமையினால் மன்னாரில் வர்த்தகர்கள் கடைகளை மூடி இன்று (நேற்று) எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரொருவரின் அடியாட்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் பொலிஸார், நீதிவானிடம் மகஜரை கையளித்துள்ளனர். அவர்கள் வழங்கிய உத்தரவை அடுத்தே கடைகள் மீண்டும் நேற்று நண்பகல் வேளையில் திறக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைகளை அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முன்னின்று நடத்துவதுதான் வேடிக்கையான விடயமாக இருக்கின்றது. அவர்களே அரசியலின் எதிராளிகளை தாக்குகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெ>விக்கப்ப டுகின்ற போதிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கவில்லை.

பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே கட்சித்தலைவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே இந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு பின்னால் இலக்க தகடற்ற வாகனங்கள் பயணிக்கின்றன. இது ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல் மட்டுமல்லாது எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அதேவேளை, ஊடகங்களையோ அல்லது மக்களையோ அடக்குமுறைக்கு உட்படுத்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுiமாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.