தீவிரவாதிகளை ஒடுக்கும் திட்டம்: இந்தியா-சவுதி அரேபியா கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; மன்மோகன்சிங் கையெழுத்து

இந்தியா – சவுதி அரேபியா இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் சவுதி அரேவியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகரம் ரியாத் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கும் சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இரு நாடுகளும் சேர்ந்து தீவிரவாதிகளை ஒடுக்குவது ஹவாலா போன்ற பண பரிமாற்றம் மோசடிகளை தடுப்பது, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்றவற்றை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் இருநாடுகளும் தங்களது நாடுகளில் பிடிபடும் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்தனர். இதன் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இதில் பிரதமர் மன்மோகன்சிங்கும் சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாவும், கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் சவுதி அரேபியாவில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் யாரேனும் பிடிபட்டால் அவர்களை சவுதி அரேபியா இந்தியாவிடம் ஒப்படைக்கும்.

இரு நாடுகளும் ராணுவ ரீதியாக ஒத்துழைப்பு கொடுப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.