தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ‘செக்

posted in: தமிழ்நாடு | 0

திண்டுக்கல்:தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாகக் காட்டி ஆசிரியர்கள் நியமனம் செய் தால், ஏற்படும் செலவினம், சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என, தொடக்க கல்வி இயக்குனர் தேவராஜ் எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர், உதவி தொடக்க கல்வி அலுவலர் களுக்கு வழங்கியுள்ள அறிவுரை:

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை மார்ச் 1ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். இவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மாறுதல் பெற்ற இடத்தில் பணியில் சேர வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக கணக்கு காட்டி, புதிய பணியிடங்களை வழங்கினால், அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம், சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். புதிய பணியிடங்கள் அனுமதி வழங்கியது குறித்து ஆய்வு செய்ய, தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கோர்ட் அறிவுரைப்படி காலமுறை சம்பளம் வழங்க, அரசு உத்தரவு வெளியானதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களது பணி வரன்முறைப்படுத்தப்பட்டு உரிய சீனியாரிட்டி வழங்க வேண்டும். வரும் ஏப்., 30ம் தேதிக்குள், அடுத்த ஆண்டுக்கான புத்தகங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.