18-ல் அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் தொடக்கம்: துணைவேந்தர் மன்னர் ஜவஹர்

posted in: தமிழ்நாடு | 0

திண்டுக்கல்,​​ பிப்.14:​ பிப்ரவரி 18-ம் தேதி திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் தொடங்கப்பட இருப்பதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.​ பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான டைஸ் 2010 விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைக்க

வருகை தந்த துணைவேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 444 பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் இன்று தொடங்கி 14 நாள்களாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

பிப்.24-ம் தேதி விளையாட்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கல்லூரிகளில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதைப் போல கல்லூரி நிர்வாகம் நிரப்பும் இடங்களிலும் இடஒதுக்கீடு குறித்த ஆலோசனை கேட்கப்படும்.

சில மாதங்களாகத் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பில் இருந்த தொய்வு தற்போது நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

பிப்.18-ம் தேதி திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் தொடங்க உள்ளது என்றார் சென்னை அண்ணா பல்கலைகக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.